Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாமானியர்களுக்கும் முதலில் வாய்ப்பு கொடுத்ததே திமுக தான்..

சாமானியர்களுக்கும் முதலில் வாய்ப்பு கொடுத்ததே திமுக தான்..

தவெக எம்.எல்.ஏ.க்கள் பலரும் இன்று நாங்கள் சாமானியர்கள் என்று பேசுகிறார்கள். இதனை வரவேற்கிறோம், ஆனால், 1967 தேர்தலில் மன்னரின் வாரிசான சண்முகராஜா சேதுபதியை, குதிரைவண்டிக்காரர் தங்கப்பன் மூலம் தோற்கடித்தது திமுக என அக்கட்சி எம்எல்ஏ கோவி.செழியன் பேரவையில் குறிப்பிட்தார்.

பொதுத் தொகுதியில் வெற்றி பெற்றதாகச் சொல்கிறார்கள். ஆனால், முதன்முதலில் கோவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த தொண்டரை பொதுத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்திய பெருமையும் தி.மு.க-வையே சேரும் என்றார். திராவிட மாடல் ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் மாணவர்களிடம் நீங்கள் படியுங்கள்; நான் பார்த்துக்கொள்கிறேன் என அடிக்கடி கூறுவார்.

மாணவர்களின் அடிப்படைக் கல்விக்கு வித்திட்டு, உயர்கல்விக்கான முதல் படியைத் தொடங்கி வைத்தது திமுக அரசு தான். ஆனால், த.வெ.க. ஆட்சியில் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் பாரதிதாசன் என்ற மாணவருக்கு முறையான நிதியுதவி கிடைக்கவில்லை என எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்று சாடினார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தை தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறதா, இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். உயர்கல்வி பயில விரும்பும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு த.வெ.க. அரசு வழங்கும் ஊக்கம் என்ன என்றும் கோவி.செழியன் வினவினார்.

error: Content is protected !!