அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பூவாயிக்குளம் மலைப்பெருமாள் ஏரிக்கு அருகே உள்ள அண்ணாதுரை மற்றும் மற்றும் ஒரு அண்ணாதுரை இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தைல மற்றும் சவுக்கு மரங்களை சாகுபடி செய்துள்ளார். யாரோ மர்ம நபர்கள் இயற்கை உபாதை கழிக்கும் செல்லும்போது பீடி சிகரெட் பிடித்து தூக்கி எறிந்த நெருப்பாலும், காற்று பலமாக வீசி வருவதாலும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அண்ணாதுரை சாகுபடி செய்திருந்த சவுக்கு மரங்கள் எரிந்து சேதமடைந்தன மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகில் இருந்த மற்றொரு அண்ணாதுரை நிலத்திற்கும் தீ பரவி அவர் சாகுபடி செய்து இருந்த தைல மரங்கள் என 2 ஏக்கருக்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் வர பாதை இல்லாததால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மண் மற்றும் பச்சை மரக்கிளைகள் மூலம் தீயை அணைத்தனர் எனினும் காற்று அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி மரங்களை எரித்து சேதப்படுத்தியது இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர். மேற்கொண்டு தீயை பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
