Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டம்- 4 மூட்டை பாத்திரங்கள்-புடவைகள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக பாத்திரங்கள் மற்றும் புடவைகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் திமுக வார்டு செயலாளர் மணிவண்ணன் மற்றும் அன்பழகன் ஆகியோர் பொதுவெளியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு இலவச சில்வர் பாத்திரங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது தேர்தல் பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்து 4 மூட்டைகளில் இருந்த 279 சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்தனர். அதேபோன்று ஜெயங்கொண்டத்தை அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தில் திமுக நகர அவைத் தலைவர் ஞானபிரகாசம் என்பவர் தனது வீட்டில் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக வைத்திருந்த 14 சில்வர் பாத்திரங்கள் மற்றும் 12 சேலைகளை கைப்பற்றி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!