Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…

ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை...

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ரம்யா மற்றும் மகன் ஆயூசாகியோர் கொல்லாபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன் காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் அமிர்தாராக பணியாற்றிய வரும்

நிலையில் அங்கிருந்தபடியே உறவினர் இல்ல நிகழ்வுக்காக சென்னை சென்றுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து இன்று அதிகாலை 3.30 மணியளயில் மனைவி மற்றும் மகனுடன் கொல்லாபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது பூட்டப்பட்டிருந்த

தனது வீடு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் மற்றும் ரம்யா ஆகியோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் படுக்கையறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த இரண்டு பவுன் சங்கிலி ஒன்று ஒரு பவுன் சங்கிலி ஒன்று மற்றும் கால் பவுன் எடையுள்ள நான்கு தங்க மோதிரங்கள் ஆகியவை திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பீரோவில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 37,000 பணமும் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

சுப்பிரமணியன் வீட்டின் மேல் தளத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அவர்கள் வெளியே வராமல் இருப்பதற்காக, வெளிப்புற தாழ்பாளையும் போட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அரியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!