Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவர் செந்துறை அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா வயது (23) என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் ரமணா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ரமணா கர்ப்பத்தை கலைக்க தா.பழூரில் உள்ள செவிலியர் ஒருவரை நாடி உள்ளார். அப்போது தனியாக கிளினிக் வைத்து நடத்தும் ராமச்சந்திரன் மனைவி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் தேன்மொழி என்பவர் உதவியுடன் செவிலியர் சக்திதேவி மற்றும் ஆயாவாக பணியாற்றும் தேவனாஞ்சேரியை சேர்ந்த வெற்றிச்செல்வி ஆகியோர் சேர்ந்து ரமணாவிற்கு கரு கலைப்பு மாத்திரை கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளனர்
இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.அங்கு பெண் குழந்தையின் சிசு வயிற்றிலேயே இறந்த நிலையில் அகற்றப்பட்டதாாகவும். தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சையில் இருந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் திருமணம் ஆகி 7 வருடங்களை ஆன நிலையில் இதுகுறித்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர். விசாரணையில் 7 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த டாக்டர் தேன்மொழி, செவிலியர், சக்தி தேவி வெற்றிச்செல்வி ஆகிய மூவரையும் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!