Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலத்திற்கு பாதை வசதி கேட்டு சாலை மறியல்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடிகாடு கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு பாதை வசதி மலட்டேரிக்கு மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரி 200.க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டுமன்னார்குடி – பாப்பாக்குடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலணிக்குழி குடிகாடு கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு வேலி ஓடையில் இருந்து மலட்டு ஏரி வரை தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை அப்புறப்படுத்தி விட்டதாகவும், இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல பாதிப்பு ஏற்படும் எனவும் எனவே ஐந்து மீட்டர் பரப்பளவில் ஏற்கனவே உள்ளது போன்று பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதேபோன்று மலட்டு ஏரி கரை பலப்படுத்தப்படும் பணிகளின் போது, கரையிலிருந்து எடுக்கப்பட்ட மண், குடியிருப்பு பகுதிகளில் மேலே நிரப்பி மழைநீர் செல்ல முடியாதபடி மண்ணை அணைகட்டி வைத்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மழைநீரானது குடியிருப்பு பகுதிகள் புகுவதுடன் தேங்கி பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திவிட்டு அதன் பிறகு கரைகளை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். பலமுறை பொதுமக்கள் வைத்த இந்த இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றாததால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் மேலணிக்குழி- காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து தற்பொழுதும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன்

தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட போலீசார் விவசாயிகள் மற்றும் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.. இது குறித்து அப்பாக்குதி கிராம விவசாயிகள் மற்றும் பெண்கள் தெரிவிக்கையில்: பொதுமக்கள் ஆகிய நாங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். வடக்கு வேலி ஓடையில் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் குடியிருப்பு நிறைந்த பகுதியில் மலட்டு ஏரிக்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
பெண்கள் மற்றும் விவசாயிகள் மழைநீர் செல்ல மண் திட்டை அகற்ற வேண்டும், விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்து தந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!