Skip to content
Home » ஜெயம்ரவி நடிக்கும் ”பிரதர்” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

ஜெயம்ரவி நடிக்கும் ”பிரதர்” படத்தின் முதல் தோற்றம் வெளியீடு….

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் பிரதர். ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழும் வகையில் கலகலப்பான குடும்பத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

ஜெயம்ரவி நடிக்கும் பிரதர் படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

பிரதர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் மட்டுமன்றி சரண்யா பொன்வண்ணன், நட்டி, பூமிகா, விடிவி கணேஷ், சீதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிரதர் திரைப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!