Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லி ஜேஎன்யூ மாணவர் யூனியன் தேர்தல்…. இடதுசாரிகள் அமோக வெற்றி

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யூனியன் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐஷே கோஷ் வெற்றி பெற்றார்.   4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ.) மாணவர்கள் யூனியன் தேர்தல் நடந்தது. கடந்த 22-ந்தேதி நடந்த இந்த தேர்தலில், 4 இடங்களிலும் இடதுசாரி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில், தலைவர் தேர்தலில் இடதுசாரி கட்சியை சேர்ந்த தனஞ்செய் என்பவர் வெற்றி பெற்றார்.இவர், ஏ.பி.வி.பி. கட்சியின் உமேஷ் சந்திர அஜ்மீராவை வீழ்த்தி 2,598 வாக்குகளுடன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

ஜே.என்.யூ. தேர்தல் கமிட்டி தலைவர் சைலேந்திர குமார் இந்த தகவலை வெளியிட்டார்.  உமேஷ் 1,676 வாக்குகள் பெற்றார். இதேபோன்று, இடதுசாரி கட்சியின் அவிஜித் கோஷ் 2,409 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக வெற்றி பெற்றார். பொது செயலாளர் தேர்தலில், 2,887 வாக்குகள் பெற்று பிரியான்ஷி ஆர்யா வெற்றி பெற்றார். இணை செயலாளராக 2,574 வாக்குகள் பெற்று மோ சஜித் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!