Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கல்வி சுற்றுலா

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி கல்வி சுற்றுலா – கல்லணை நோக்கி புறப்பட்ட 56 பேர்: மாவட்ட ஆட்சியருக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்ற குழந்தைகள்.

கரூர் மாவட்டத்தில், ஒன்று முதல் ஆறு வயது வரையிலான காது கேளாத, வாய் பேசாத மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்ட

நிர்வாகம் சார்பில் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, 56 மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பேருந்து மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கல்லணைக்கு ஒரு நாள் கல்விச் சுற்றுலாவுக்கு

அழைத்துச் செல்லப்பட்டனர்.

கரூரில் இருந்து புறப்பட்ட பேருந்தை மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தார். முன்னதாக, மாவட்ட ஆட்சியரை வரவேற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் அவருக்கு ரோஜா பூக்களை வழங்கினர்.

சுமார் 93 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லணைக்கு குழந்தைகள் ஆர்வத்துடன் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.

error: Content is protected !!