Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீஸ் காவலில் வாலிபர் பலி, அவர் என்ன தீவிரவாதியா? நீதிபதிகள் கேள்வி

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த நிகிதா என்​பவரது நகைகள் திருடு​போய்​விட்​டன. இது தொடர்​பான புகாரின் பேரில் அஜித்​கு​மார் உள்​ளிட்ட சிலரை திருப்புவனம் போலீஸார் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

பின்​னர், அஜித்​கு​மாரை நேற்று முன்​தினம் விடு​வித்​தனர். வெளியே வந்த அவரை மீண்​டும் மானாமதுரை உட்​கோட்ட தனிப்​படை போலீ​ஸார் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். அப்போது, உடல்​நலம் பாதிக்​கப்​பட்​ட​தாக கூறி அஜித்​கு​மாரை மதுரை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்​கு கொண்டு சென்​றுள்​ளனர். அவரை பரிசோ​தித்த டாக்​டர்​கள், அவர் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். பின்​னர், பிரேதப் பரிசோதனைக்​காக அஜித்​கு​மாரின் உடலை மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு போலீ​ஸார் கொண்டு சென்​றனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாக திருப்​புவனம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை மேற்​கொண்​டனர். இதற்​கிடை​யில், மானாமதுரை உட்​கோட்ட தனிப்​படையைச் சேர்ந்த காவலர்​கள் பிரபு, கண்​ணன், சங்​கரமணி​கண்​டன், ராஜா, ஆனந்த், ராமச்​சந்​திரன் ஆகிய 6 பேரை பணி​யிடை நீக்​கம் செய்து காவல் கண்​காணிப்​பாளர் ஆஷிஷ் ராவத் உத்​தர​விட்​டார். மேலும், சம்​பவம் தொடர்​பாக திருப்​புவனம் மாவட்ட உரிமை​யியல் மற்​றும் குற்​ற​வியல் நடு​வர் வெங்​கடேஷ் பிர​சாத் நேற்று விசா​ரணை நடத்​தி​னார்.

இந்​நிலை​யில், பிரேதப் பரிசோதனை செய்​வதற்கு அஜித்​கு​மாரின் உறவினர்​கள் எதிர்ப்​பு தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அஜித்​கு​மாரை கொன்ற காவலர்​களை உடனடி​யாக கைது செய்ய வேண்​டும், குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என அவர்​கள் வலி​யுறுத்​தினர்.

அப்​போது, அஜித்​கு​மாரின் தாயார் மால​தி, சகோ​தரர் நவீன்​கு​மார் ஆகியோரை திமுக பிர​முகர் ஒரு​வரது காரில் ஏற்​றி, உடலை வாங்குவதற்​காக மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல முற்​பட்​டனர். இதற்கு எதிர்ப்​பு தெரி​வித்து கிராம மக்​கள் மற்​றும் அதி​முக எம்​எல்ஏ செந்​தில்​நாதன் தலை​மையி​லான கட்​சி​யினர் மறியலில் ஈடு​பட்​டனர்.

அவர்​களை சமா​தானப்​படுத்​திய போலீ​ஸார், அஜித்​கு​மாரின் தாயார், சகோ​தரரை காவல் துறை காரில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்​துச் சென்​றனர். வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டு, அஜித்​கு​மார் உடல் குடும்​பத்​தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இதனிடையே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளை அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. . இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, “உயிரிழந்த இளைஞர் என்ன தீவிரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினரா?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம்  என தெரிவித்துள்ளனர். மேலும், “சாதாரண சந்தேக வழக்கில் விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் என தெரியவில்லை?” என்று குறிப்பிட்ட நீதிபதிகள் சட்டவிரோத காவல் மரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், கடந்த 4 ஆண்டுகளில், 24 காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

 

error: Content is protected !!