திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பிவி வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம் கிறிஸ்டோபர் தலைமையில் நாளை (வியாழக்கிழமை )மதியம் 1:15 மணிக்கு பெஞ்ச் அண்டு பார் மீட்டிங் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள புதிய நீதிமன்ற வளாகம் நான்காவது மாடியில் உள்ள மீட்டிங் ஹாலில் நடைபெற உள்ளது.
நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை வைக்கும் இந்த நிகழ்வில் வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது. மக்கள் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் சமரசம் பேசி முடிப்பதற்கு வழக்கறிஞர்களிடம் நீதியரசர் கருத்துக்களை கேட்க உள்ளார். ஆகவே இந்த நிகழ்வில் அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
