திருச்சியில் கழக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என்.நேரு , வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை (30.03.2026) திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சாலை தவளவனிடம் வழங்கினார். அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி ரேக்ஸ், மதிமுக மாவட்ட நிர்வாகி வெல்லமண்டி சோமு , தொழிலதிபர் ரவிச்சந்திரன் உட்பட அரசு அதிகாரிகள் உள்ளனர்.
திருச்சி மேற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்; மக்கள் எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவார்கள் – அமைச்சர் நேரு வேட்புமனு தாக்கல் செய்த பின் பேட்டி.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில்
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனையொட்டி மாவட்ட ஆட்சியரக சாலையில் உள்ள மேஜர் சரவணன் சிலை அருகில் இருந்து மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு நேரு வருகை தந்தார். தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாலை தவவளனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
முதல்வர் ஆசியுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.
மீண்டும் மேற்கு தொகுதியில் மக்கள் வாய்ப்பு வழங்குவார்கள்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவதால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு …..
தேர்தலில் யாரும் எங்கேயும் போட்டியிடலாம் என அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது.
அந்த வகையில் அவரும் போட்டியிடுகிறார்.
மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்று தெரியும்.
விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு…
பயம் இருக்கலாம்.
பயமா என்று எனக்கு தெரியாது ஆனால்,
கிழக்கு தொகுதியை பொருத்தவரை திமுக வெற்றி பெறும் நம்பிக்கையில் இருக்கிறோம்.
தேர்தல் அறிவிப்பில் மதுவிலக்கு சம்பந்தமாக ஏதும் இல்லை என்ற கேள்விக்கு..
இருக்கும் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்தாலே போதும்.
இந்தப் பொருட்கள் தான் என்று சொல்லாமல் கூப்பன் தருவது, நெல் குவிண்டாலுக்கு 300 தருவது,
கரும்புக்கு 4500 தருவது, முதியோருக்கு ஓய்வூதியம் 2000 ஆக உயர்த்தி தருவது, 10 லட்சமாக மருத்துவ இலவச உதவித்தொகை உயர்த்தி தருவது, விவசாயிகளுக்கு திட்டங்களை நிறைய முதலமைச்சர் தந்திருக்கிறார். ஏற்கனவே முதல்வர் கூறியது போல
தேர்தல் அறிக்கை தேர்தல் கதாநாயகனாக இருக்கிறார்.
மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், சிறந்த ஆட்சி உருவாக மக்கள் ஆதரவு தருவார்கள் என தெரிவித்தார்.
