Skip to content
Home » கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்…

  • by Senthil

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். பருத்தி மறைமுக ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1606 விவசாயிகள், சராசரியாக 2280 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 8 வணிகர்கள் பங்கேற்று, அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.7309,
குறைந்தப் பட்சம் ரூ.6669, சராசரி ரூ.6950 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மதிப்பு சராசரி ரூ 1.56 கோடி ஆகும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!