கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கை விசாரிக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஸ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஐ.ஜி. காமினி கண்காணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
