Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

20 பெண்களை திருமண மோசடி செய்த கல்யாண ராமன்

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுக்கு மேட்ரிமோனியில் அருண்மொழி (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக நம்பி, அப்பெண் 17 சவரன் நகை, ரூ.2.5 லட்சம், ஆகியவற்றை அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அருண்மொழி காணாமல் போயுள்ளார். புகாரின் பேரில் அருண்மொழியை கைது செய்தனர். இதனை தொடர்ந்து விசாரணையில், இதுபோல 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!