Skip to content
Home » மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தை முடக்கியது யார்?

மக்கள் நீதி மய்யத்தின் இணையதளத்தை முடக்கியது யார்?

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிவு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் விஷமிகளால் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்கபதிலடி கொடுப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்சி இணையதள பக்கம் முடக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலக மாநில செயலாளர் எஸ்.பி. அர்ஜூனர் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதள பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டதில் அரசியல் சதி இருக்கிறது. எங்களை நேரடியாக தாக்க முடியாதவர்கள் மறைமுகமாக ‘ஹேக்’ செய்து தாக்க நினைக்கிறார்கள். யார்? யார்? மீது சந்தேகம் இருக்கிறது என்ற பட்டியலை புகார் மனுவில் கொடுத்துள்ளோம். போலீஸ் துறையினர் சரியான முறையில் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!