Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காமராஜர் பிறந்த நாள் விழா… கரூர் த.வெ.க கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  கரூர் மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள  காமராஜரின் முழு திருவுருவ சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, நாடார் ஐக்கிய சங்கம், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயபக்தியுடன் காமராஜர் சிலைக்கு  மரியாதை செலுத்தினர். மேலும்,காமராஜர் புகழ் ஓங்குக! த.வெ.க தலைவர் தளபதி விஜய் புகழ் ஓங்குக! என்று கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!