Skip to content
Home » திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

  • by Senthil

பிரதமர் மோடி விழாவில் பங்கேற்ற  கனிமொழி எம்.பி. சென்னை திரும்பினார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்கள்  என்ன.  எதை திமுக தடுத்தது?  , தமி்ழ்நாடு எந்த திட்டத்தையும் தடுக்கவில்லை.  மோடி வீடு வழங்கும் திட்டத்திற்கு  25 சதவீத பணம் தான் மத்திய அரசு கொடுக்கிறது. 75 சதவீத பணம் தமி்ழ்நாடு அரசு கொடுக்கிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு பிரதமர் வீடு கட்டும் திட்டம். இதில் யார் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் வருவதால் சில திட்டங்களை இன்று அறிவித்து இருக்கிறார்கள்.  மழை, புயல்  நிவாரண நிதி கொடுத்தார்களா?

திமுகவை அகற்ற வேண்டும். தேடினாலும் கிடைக்காது என்று மோடி சொல்லி உள்ளார். இப்படி சொன்னவர்கள் பலரை பார்த்து விட்டோம்.  அவர்கள் தான்  காணாமல் போய்விட்டார்கள்.திமுக இருந்து கொண்டு தான் இருக்கிறது.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டத்தை 2013 ல் இருந்து நாங்கள் வலியுறுத்தி்வருகிறோம். இதற்கு 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உடனடியாக தமிழக அரசு  கொடுத்து உள்ளது.  மேடையில்  நானும், அமைச்சர்எ.வ. வேலுவும் கலந்து கொண்டோம். எங்கள் பெயரை சொல்லக்வட பிரதமருக்கு மனது இல்லை.  அவருக்கு தெரிந்த நாகரீம் இதுதான். இதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த  ஏவுதள திட்டம் கலைஞரின் கனவு திட்டம். இதனால் கலந்து கொண்டோம்.

அரசியல் வேறு, மதம் வேறு என்பதை  தமிழக மக்கள்  தெளிவாக புரிந்து கொண்டவர்கள். நாங்கள் ராமர் கோயிலுக்கு எதிராக   மக்களவையில் வெளிநடப்பு செய்யவில்லை.  ஒரு தனி்யார் டிரஸ்ட்  ராமர் கோயிலை கட்டி உள்ளது. இதற்கு பாஜக அரசு எப்படி உரிமை கொண்டாடுகிறது. அவர்கள் பேசிய பேச்சை கண்டித்து தான்  வெளிநடப்பு செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!