கர்நாடகத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு..

139
Spread the love

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்த கர்நாடக முதல்வரை தேர்தெடுப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் முடிவில் பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை கர்நாடக பாஜக மேலிட பார்வையாளர் தர்மேந்திரா பிரதான் அறிவித்தார். பசவராஜ் பொம்மை முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மையின் மகன் ஆவார். எடியூரப்பாவுக்கு நெருக்கமான பசவராஜ் பொம்மை இதற்கு முன்பாக உள்துறை அமைச்சராகவும்  இருந்தார்.

LEAVE A REPLY