Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பிவிடும்- முதல்வர் டி.கே.சிவகுமார்

கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பிவிடும்- முதல்வர் டி.கே.சிவகுமார்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டமும் ஒரு அடி அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து 8,000 முதல் 10,000 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்பதால், தமிழகத்திற்கு காவிரி நீர் விரைவில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியதாவது…

கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பிவிடும் என எனக்கு தகவல்கள் வந்துள்ளன. நாம் தண்ணீரை தடுத்து நிறுத்த முயன்றால், அனைவருமே அடித்துச் செல்லப்படுவோம். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறப்பதற்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை கைவிடுக. இயற்கை ஒருபோதும் யாருக்கும் சொந்தமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!