காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் முறையாக செயல்படுத்தாததால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. மழை அதிகமாக பெய்ததால் உபரி நீரை மட்டுமே கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டதாகவும் தெரிவித்தது. இதையடுத்து, “அணைகளில் நீரை முழுமையாக சேமிக்க முடியாததால் கர்நாடகம் தண்ணீரை திறந்துவிட்டதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், காவிரி ஆணைய உத்தரவை செயல்படுத்தாத விவகாரத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
