Skip to content
Home » கர்நாடக தேர்தல்…. இன்று வேட்புமனு தாக்கல்

கர்நாடக தேர்தல்…. இன்று வேட்புமனு தாக்கல்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே10-ந்தேதி) தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ந்தேதி (இ்ன்று) தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சியும் கடந்த மார்ச் 26-ந்தேதி முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும், 2-வது கட்டமாக கடந்த 6-ந்தேதி 42 தொகுதிகளுக்கும் என மொத்தம் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஆனால் ஆளுங்கட்சியான பா.ஜனதா வேடபாளர் பட்டியலை இறுதி செய்யும் பணி இழுபறி நீடித்தது. மூத்த தலைவர்களுக்கு டிக்கெட் கொடுக்காமல் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்திருந்தது. இதனால் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 4 நாட்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு அக்கட்சியின் மேலிட பார்வையாளர் அருண்சிங் நேற்று முன்தினம் டில்லியில்

 

189 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது.வேட்புமனு தாக்கல் தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும்.

பெங்களூருவில் மாநகராட்சியின் 8 மண்டல அலுவலகங்களில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தவிர்த்து பிற மாவட்டங்களில் மாநகராட்சி, கலெக்டர், தாலுகா அலுவலகங்கள், மண்டல கமிஷனர் அலுவலகங்களும் தேர்தல் அலுவல கங்களாக செயல்பட உள்ளன. சம்பந்தப்பட்ட தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள் அங்கு வந்து மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் நடைபெறும் அரசு அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கும் நிலையில், ஏற்கனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட தொடங்கிவிட்டனர். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!