Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

தை முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,அபிஷேக பொடி, பன்னிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கு பட்டாணி உடுத்தி, வண்ண மாலைகள் அனுபவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு உதவி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியின் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் அண்ணாசாலை ஆன்மீக ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தை மாத முதல் நாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீல் பக்தர்கள் ஆலயம் செய்தனர்.

error: Content is protected !!