Skip to content
Home » கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தகுந்த நேரம்…

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தகுந்த நேரம்…

  • by Senthil

கார்த்திகை மாதம் தொடங்கிய முதல் நாளில் இந்தாண்டு கார்த்திகை தீபத்திருநாள் கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. வெள்ளி கற்பக விருக்ஷம், வெள்ளி ரதம், ரிஷப வாகனம் என கோலாகலமாக தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு மலை மேல் பிரமாண்டமாக மகா தீபம் ஏற்றப்படும்.

26 நவம்பர் 2023: (கார்த்திகை 10 ஞாயிறு) பரணி தீபம் காலை 4 மணிக்கு, மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும்.

வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம்

கார்த்திகை தீபம் நம் வீடுகளிலும் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். நாம் அன்றைய தினத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு. வீடுகளில் தீபங்கள் ஏற்ற தயாராக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படக்கூடிய மாலை 6 மணிக்கு நாமும் நம் வீட்டு வாசல் மற்றும் பிற இடங்களில் வைக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சரியான நேரமாக இருக்கும்.

திருவண்ணாமலையில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 22-ஆம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் மாட வீதியில் பவனி வந்து பஞ்சமூர்த்திகள் அருள் புரிவார்கள். இதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 23 ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும்.

இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நிறைவு நாளான 10வது  நாள் நவம்பர் 26- ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!