சென்னை கிண்டி கவர்னர் மாளிகை யின் வெளிப்புற கேட் அருகே கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை என்ஐஏ விசாாிக்கத் தொடங்கி உள்ளது.
எனவே கருக்கா சுரேசை 7 நாள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை பூந்தமல்லி சிறப்பு கோட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். கோர்ட் அனுமதி அளித்ததும் கருக்கா வினோத்தை என்ஐஏ அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரிப்பார்கள்.