Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஓராண்டு கொண்டாட்டம்… திருச்சி திமுக முடிவு

திருச்சி மத்திய,வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள  கழக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகத்தில் நடைபெற்றது.திருச்சி மேயர் அன்பழகன், மற்றும் மத்திய மாவட்ட  திமுக செயலாளர் வைரமணி  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.இந்த கூட்டத்தில் 29 வார்டு உறுப்பினர்களும் திமுக நிர்வாகிகளும்  திரளாக கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும், கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!