கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சமூக மக்களுக்கு மட்டும் 100 நாள் வேலை வழங்கப்படுவதாகவும், மற்றவர்களுக்கு மூன்று மாதங்களாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கும் அரசு அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது, எந்த விபரமும் சொல்ல மறுக்கின்றனர். உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும், உடனடியாக வேலை வழங்க வேண்டும் என கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை

முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பயனாளிகளுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதனை தொடர்ந்து உடனடியாக அடையாள அட்டை திருப்பித் தருவதாகவும், வரும் வியாழக்கிழமை முதல் 100 நாள் வேலை வழங்கப்படும் என பேச்சு வார்த்தையின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி உறுதி அளித்ததின் பேரில், தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்து கலைந்து செல்வதாக தெரிவித்தனர். 100 நாள் பயனாளிகளுக்கு வேலை வழங்காவிட்டால் வெள்ளிக்கிழமை அன்று வேட்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்தார்.