Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே 15 வயது சிறுமி காணவில்லை… கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு வந்த கடவூர் வட்டம், தொண்டமாங்கிணம் கிராமத்தை அடுத்த குண்டன் பூசாரியூரை சார்ந்த முருகேசன், நல்லங்காளில் தம்பதியினரின் இளைய மகள் பிரேமா (15). 9ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் உள்ள தனியார் காட்டன் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் கடந்த 17ம் தேதி காலை 8.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ள தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 2 நாட்களாக காவல் நிலையத்திற்கு சென்ற சிறுமியின் பெற்றோரை காலை முதல் இரவு வரை காக்க வைத்து விட்டு, எதுவும் சொல்லாமல் திருப்பி அனுப்பி வைத்து விடுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். தன்னுடைய 15 வயது மகளை காணவில்லை எனக் கூறி புகார் அளிக்க காவல் நிலையம் சென்றால் வளர்ப்பு சரியில்லை என போலீசார் கூறுவதாக குற்றம் சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!