Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூர் பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ பற்றுவதற்கு முன்பே காரில் இருந்த அனைவரும் இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் காரின் எஞ்சின் மற்றும் முக்கிய பகுதிகள் தீக்கிரையாகி கருகியது. எரிபொருள் நிரப்ப வந்த கார் பெட்ரோல் பங்குக்கு அருகிலேயே திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!