திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் இன்று (நவ.23) சோதனை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை
