Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே தகராறு…ஒருவர் கொலை….

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ஷேர் ஆட்டோ ஸ்டேண்டில் கடந்த 16ம் தேதி இரண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முந்திச் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கிருஷ்ணராயபுரம் அடுத்த ஆர்.புதுக்கோட்டையை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கரை, தாந்தோன்றிமலை வடக்குத் தெருவை சார்ந்த கார்த்தி என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர்

கல்லால் தாக்கியதில் பாஸ்கர் தலையில் படுகாயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் பாஸ்கரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் உயிரிழந்தார். இது தொடர்பாக பாஸ்கரின் மனைவி கண்ணகி அளித்த புகாரின் பேரில் கார்த்தியை தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!