Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் களைகட்டிய ஆயுத பூஜை….முருகன்-இயேசு படம் வைத்து வழிபாடு..

கரூரில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு, இன்று தொழிற்சாலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கரூர் அடுத்த ஆத்தூர் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள பல்வேறு ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், ஆயுதபூஜையை முன்னிட்டு துாய்மைப்படுத்தி, சாணத்தால் மெழுகி, வண்ணச்சாந்து பூசி, மங்களகோலமிட்டு, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்மாலைகளை சூட்டி அழகுபடுத்தினர். குறிப்பாக அங்குள்ள தனியார் ஜவுளி ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றில்ல் மத நல்லிணக்கத்தை

ஏற்படுத்தும் விதமாக சரஸ்வதி, விநாயகர், முருகன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவாமி படங்கள் எழுந்தருளுவித்து, தேங்காய், பழம், பொரி, சுண்டல் படையலிட்டு தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் சுவாமிக்கு படையலிட்ட பொரி, சுண்டல் பிரசாதங்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!