Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் பதவியேற்றவுடன் மக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்…

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் கோயம்பள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாவட்டத்தின் 19வது ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி முன்னிலையில் நடைபெற்ற இந்த மனுநீதி நாள் முகாமில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 124 பயனாளிகளுக்கு ரூபாய் 85.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக மனுநீதி நாள் முகாமில்

கலந்துகொண்ட ஆட்சியர் தங்கவேல் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை அரசுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!