Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாவட்டத்தில் குரூப் 2-குரூப் 2ஏ 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர்…

கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வினை 10,821 பேர் தேர்வு எழுதுகின்றனர் – பறக்கும் படை கண்காணிப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ

தேர்வு இன்று கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 39 மையத்தில் 10,821 பேர் தேர்வு எழுதும் நிலையில், மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு மையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

காலை 10.00 மணி அளவில் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், 90 சதவீதம் பேர் தேர்வு மையத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 நபர்கள் தேர்வு எழுதும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் காலை 8.55 மணியளவில் நுழைவாயில் சாத்தப்பட்டு, தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனர்.

மேலும், தேர்வு மையங்கள் அனைத்திலும் முழுவதும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!