Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…

கரூர் மாவட்டம், குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23).  விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு தனது ஊரான தேசியமங்கலதிற்கு டூவீலரில் தா. பேட்டை ரோடு ரவுண்டானா அருகில் சென்றபோது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பஸ்  கண்ணதாசன் ஓட்டி வந்த டூவீலரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கண்ணதாசன்  உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி போலீசார் கண்ணதாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!