Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர்

விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிந்த பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து நந்தி பகவானே மனமுருகி வழிபட்டனர்.

error: Content is protected !!