Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா

கரூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் வைகாசி பெருவிழா கடந்த 3ஆம் தேதி கம்பம் நடப்பட்டு கோலாகலமாக தொடங்கியது. வரும் 27ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.

திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கம்பத்திற்கு தீர்த்தம் மற்றும் பால் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

வரும் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்துதல், காவடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 27ஆம் தேதி முக்கிய நிகழ்வாக கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கோவில் வளாகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கம்பம் செல்லும் பாதை வரைபடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார்.

மேலும், கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். திருவிழா நாட்களில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்யவும், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் காவல்துறை முழு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

error: Content is protected !!