Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை-தந்தை பலி-திருமண வீட்டில் சோகம்

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டத்தில், திருமண வைபவத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கு அலங்கார கம்பிகளில் இருந்து மின்சாரம் கசிந்ததில் சிக்கி புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் 24 அன்றுதான் இவருக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண கொண்டாட்டத்தில் பெய்த திடீர் மழை

அனுமகொண்டா மாவட்டம் பீமாரத்தைச் சேர்ந்த சாம்பையா என்பவரது இளைய மகன் சரத்திற்கு கடந்த வாரம் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இதற்காக அவர்களது வீடு முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில், அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வீட்டின் மாடியில் கட்டப்பட்டிருந்த அலங்கார மின்சார வயர்கள் முற்றிலும் நனைந்து, எதிர்பாராத விதமாக மின்சாரக் கசிவு ஏற்பட்டுள்ளது.

மழை நின்ற பிறகு, சாம்பையாவும் அவரது மகன் சரத்தும் வீட்டின் மாடிப் பகுதிக்கு ஏறிச் சென்றுள்ளனர். அப்போது அங்கு கசிவு ஏற்பட்டிருந்த மின்சார வயரை சாம்பையா எதிர்பாராத விதமாகத் தொட்டுள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடித்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் தனது தந்தை மின்சார அதிர்ச்சியால் துடிப்பதை கண்ட சரத், அவரை எவ்விதப் பாதுகாப்பும் இன்றி கைகளால் பிடித்துக் காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் சரத் மீதும் மிகக் கடுமையான அளவில் மின்சாரம் பாய்ந்தது. இந்த கொடூர சம்பவத்தில் தந்தை, மகன் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

error: Content is protected !!