கரூரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 20 ஆயிரத்து 56 கோடி ரூபாய் நிதியையும், தமிழக அரசு விடுவிக்க வேண்டிய 29 ஆயிரத்து 863 கோடி ரூபாய் நிதியையும் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மேம்பாட்டு நிதியை முறையாக ஒதுக்கீடு செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.
