தை மாதத்தில் விசேஷ அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். நதிக் கரைகளில் தை அமாவாசை தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பித்ருக்களின் ஆசியைப் நமக்கு பெற்று தரும் என நம்பிக்கை நிலவுகிறது.இதனால் தை அமாவாசை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் மக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் காவேரி ஆற்றங்கரை ஒட்டிய மாயனூர், தளவாபாளையம், நெரூர், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நீர் நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் புனித நீராடிய பிறகு வாழை இலையில் பழம், வெற்றிலை பாக்கு, எள்ளு, அரிசி ஆகியவற்றை கொண்டு ஏராளமானோர் வரிசையாக அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.