Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

தெற்கு டெல்லியின் பேகம்பூர் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரரை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (எ) கைலி (25) என்பவர் பழைய இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு, ராகேஷ் மது அருந்திவிட்டுத் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்ருஜன் என்பவரின் செல்போனைப் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரம் குறையாத ராகேஷ், நள்ளிரவு 1 மணியளவில் சத்ருஜன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு மரக்கட்டையால் அவரை அடித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த சத்ருஜனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தப்பியோடிய ராகேஷை போலீஸார் விரைந்து செயல்பட்டுக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகேஷ் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மது போதையில் ஏற்பட்ட சிறிய தகராறு கொலையில் முடிந்தது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!