தமிழ் மொழிக்காக போராடி இன்னுயிர் நீர்த்த தியாகிகளை போற்றும் விதமாக ஜனவரி 25-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தியாகிகள்
திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.