Skip to content
Home » அவசர உதவிக்கு போன் செய்த அதிகாரியிடம் நேரில் வந்து புகார் கூறிய கரூர் எஸ்ஐ..

அவசர உதவிக்கு போன் செய்த அதிகாரியிடம் நேரில் வந்து புகார் கூறிய கரூர் எஸ்ஐ..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன். செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணை மேலாளர், இவர் தனது குடும்பத் தேவைக்காக 2022-ஆம் ஆண்டு, ரூபாய் 23 லட்சம் வீட்டு அடமான கடனாக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். முறையாக வட்டி செலுத்தி வந்த நிலையில், திடீரென அடமான பத்திரம் எனக்கூறி பெறப்பட்ட பத்திரப்பதிவில் மோசடி செய்து வீட்டினை, நிதி நிறுவன அதிபர் ரகுநாதன் கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனோகரன் வழக்கு தொடர்ந்து, இரண்டு விசாரணைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் பத்துக்கும் மேற்பட்டோர் காந்திகிராமம் பகுதியில் உள்ள, மனோகரன் வீட்டில், பயங்கர ஆயுதங்களுடன் வந்து கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மனோகரன் குடும்பத்தினர் கரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது எஸ்ஐ மணிகண்டன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்குமாறு கூறியதாக தெரிகிறது. மனோகரன் தனது வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காண்பித்து ரவுடிகள் பட்டப்பகலில் தங்கள் குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். இதனை தடுக்க முற்பட்டபோது, திடீரென கல்வீசி தாக்கியதாகவும், அப்பொழுது வீட்டின் முன் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூடியதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் புகார் விஷயத்தில் போலீசார் ஏன் அலட்சியமாக இருந்தார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!