Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்

கரூர் மாவட்டம், புகலூர் வட்டம் பாளையம் கிராமம் சூரியம் பாளையத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆகிய இடும்பன், மாயவர், கருப்பணசுவாமி, மலையாள கருப்பணசுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீர்த்தம் கொண்டு வந்த பிறகு முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தை

ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்து வாரு மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் கோபுர கலசம் வந்தடைந்தனர்.

அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓதியபடி கோபுர கலசத்திற்கு நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தால் மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது.

அதை தொடர்ந்து மூலவரான ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் நான்கு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் அனைத்து சுவாமிகளுக்கு பட்டறை உடுத்தி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஆலயத்தில் குடியிருந்த அனைத்து பக்தர்கள் மீதும் புனிதத் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!