கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனை முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நிலுவை கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் 1 -07 -2022 முதல் வழங்கப்பட வேண்டிய 4%சதவீத அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட வரை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிரந்தர
பணியிடங்களை அழித்திடும் அரசாணைகள் 115. 139 மற்றும் 152 ஐ உடனடியாக ரத்து செய்கிற வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி இருக்கை பணிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட நிலுவை உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல வேளாண் பொறியியல் துறை,பொதுப்பணித்துறை,வட்டார கல்வி அலுவலகம், கால்நடை உதவி அலுவலகம், நகராட்சி யூனியன் அலுவலகம் பல்வேறு அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.