Skip to content
Home » எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல… அரசு ஆசிரியர் வீட்டில் டிஜிட்டல் பேனர்..

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல… அரசு ஆசிரியர் வீட்டில் டிஜிட்டல் பேனர்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையம் வசிப்பவர் செந்தில் குமார். இவர் குப்பாண்டியூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செந்தில் வடிவு கரூர் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டின் முன் மற்றும் பின்பக்கத்தில் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என குறிப்பிட்டு அவர்களின் பெயர்களையும், பதவியை குறிப்பிட்டு சிறிய அளவில் டிஜிட்டல் பேனர் அச்சிட்டு ஒட்டி வைத்துள்ளனர். இது அப்பகுதியில் வசிப்பவர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஜனநாயகப்படி தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் கடமை, ஆட்சியர்களுக்கு முறையாக தேர்ந்தெடுப்பது நமது கடமை என்றார். மேலும், தனது தந்தை சண்முகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலாக இருந்து ஓய்வு பெற்றவர். அவர் காலத்தில் இருந்தே இது போன்று வைத்துக் கொண்டு வருவதாகவும் கடந்த 45 ஆண்டுகளாக ஒவ்வொரு நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் போதும் இந்த பதாகையை வெளியில் வைப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!