கரூர், செம்மடை அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பொழுது நாமக்கல் மாவட்டம் தோலூர் மணிப்புதூரை சேர்ந்த வல்லரசு என்பவர் ஓட்டி வந்த வந்த லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 4,90,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே பகுதியில் மீண்டும் அதே இடத்தில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது தளவாபளையம் கடைவீதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஒட்டி வந்த தோஸ்த் லாரியில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 1,09,245 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாங்கல் சோதனை சாவடியில் வாகன தணிக்கையின் போது திருச்சி மாவட்டம் தொட்டியம் காட்டுப்புத்தூரை சேர்ந்த கோவிந்தன் என்பவர் ஓட்டி வந்த லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 5,40,790 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று ஒரே நாளில் மூன்று இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11,40,035 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட அனைத்து பணங்களும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
