Skip to content
Home » கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

கரூர்.. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சீல்…

  • by Senthil

கரூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு (19.04.2024) 1,670 வாக்குபதிவு மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குபதிவு பணியில் 9,073 அரசு அலுவலர்கள் மற்றும் 1,839 காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவிற்காக 8.000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,000 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,167 வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன.

கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில் 80.91 சதவீத வாக்குப்பதிவும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளில் 82.66 சதவீதவாக்குப்

பதிவும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 253 வாக்குச்சாவடிகளில் 78.84 சதவீதவாக்குப் பதிவும், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளில் 75.97 சதவீதவாக்குப் பதிவும்.

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 255 வாக்குச்சாவடிகளில் 80.49 சதவீத வாக்குப்பதிவும் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளில் 74.43 சதவீத வாக்குப்பதிவும் என மொத்தம் 1,670 வாக்குச்சாவடிகளில் 78.61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன இந்த நிலையில் வாக்குப்படியில் இயந்திரங்களை தளவாய்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், தேர்தல் பொதுப் பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் முன்னிலையில் கரூர் மாவட்டம் தளவாய்பாளையம் பகுதியில் அமைந்துள்ள எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணூம் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் (STRONG ROOM ) கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 133 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பிரபாகர் , மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் , தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) விமல்ராஜ் அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!