Skip to content
Home » பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

கரூர் மாவட்டம் கடவூர் அருகே முத்த கவுண்டன்பட்டியை சேர்ந்த சிதம்பரம் மகன் இளையராஜா(45).இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய நிலத்தினை அளவீடு செய்து தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

இது குறித்து மாவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமார பாண்டியன் விவசாய நிலத்தினை அளவீடு செய்து பட்டா வழங்குவதற்கு ரூபாய் 17000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கவே அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் 17,000 பணத்தினை அவரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்க கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து  நேற்று மாவத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற இளையராஜா ரசாயனம் தடவிய ரூ. 17000 பணத்தினை கிராம நிர்வாக அலுவலர் குமார பாண்டியனிடம் அளிக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஸ்பி இமயவர்மன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!