Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாமக்கல் கொமதேக வேட்பாளர் திடீர் மாற்றம் ஏன்?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த தொகுதியில்  சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆட்சி மன்ற கூட்டத்தில் நேற்று  எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஸ்வரன் என்பவர் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் சூரியமூர்த்தி மீது  சமூக வலைதளங்களில் சாதி ரீதியான விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!